முதன் முதலாக பேய் வேடத்தில் நடிக்கும் நடிகை காஜல் அகர்வால் அதுவும் இவருடன்.!

தமிழ் திரையுலகில் தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களை கவர்ந்த நடிகை என்றால் அது காஜல் அகர்வால் தான் இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்ததன் மூலமாகவே பலமொழி திரைப் படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தது மூலம் தற்பொழுது உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்குகிறார் அதிலும் குறிப்பாக இவர் பிரபல முன்னணி நடிகருடன் இணைந்து மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கினார்.

இந்நிலையில் காஜல் அகர்வால் தற்போது தமிழில் இயக்குனர் கல்யாண் இயக்கும் கோஷ்டி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் இவருடன் இணைந்து சத்யன்,மயில்சாமி,கேஎஸ் ரவிக்குமார்,யோகி பாபு,ஊர்வசி மொட்டை ராஜேந்திரன் போன்ற ஒரு சினிமா பட்டாளமே நடித்து வருகிறார்களாம்.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் காஜல் பேயாக மட்டும் நடிக்காமல் போலீஸ் அதிகாரியாகவும் இரண்டு வேடத்தில் நடித்து வருகிறாராம் இந்நிலையில் இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

kajal
kajal

இதனைத்தொடர்ந்து  இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பலரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள் மேலும் இந்த திரைப்படம் வருகின்ற நவம்பர் மாதம் திரையரங்கிற்கு வரும் எனவும் தகவல் வைரலாகி வருகிறது.

Leave a Comment