அழகு பேயாக மிரட்ட வரும் காஜல் அகர்வால்.! ரசிகர்கள் ஏற்று கொள்வார்களா.?

0

சமீபகாலங்களாக நடிகைகள் அனைவரும் வித்தியாசமான கதைவுள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். பொதுவாக ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் என்றால் பெரும்பாலான திரைப்படங்களில் நல்ல கேரக்டரில் தான் நடித்து வருவார்கள்.

ஆனால் தற்பொழுது உள்ள முன்னணி நடிகைகள் எல்லாம் பெரும்பாலும் வித்தியாசமான கதை உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள். அதிலும் சோலோ ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருந்த பலரும் கமர்ஷியல் திரைப்படங்களில் நடித்து வந்தார்கள்.

ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக தற்பொழுது உள்ள முன்னணி நட்சத்திரங்களான நயன்தாரா, ஹன்சிகா, ஆண்ட்ரியா, திரிஷா ஆகியோர்கள் பேய் திரைப்படத்தில் நடித்து உள்ளார்கள் என்பது நாம் அறிந்த ஒன்று தான். அதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இப்படிப்பட்ட நிலையில் மீண்டும் பிரபல நடிகை ஒருவர் பேய் திரைப்படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

அது வேறு யாருமில்லை தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் காஜல் அகர்வால் தான் பேய் படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார். இவர் நடிக்கவுள்ள இந்த திரைப்படத்திற்கு கோஷ்டி என்று பெயர் வைத்துள்ளார்கள்.

kajal agarwal 7
kajal agarwal 7

குலேபகாவலி, ஜாக்போட் போன்ற திரைப்படங்களை இயக்கிய கல்யாண் இத்திரைப்படத்தை இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வாலை தொடர்ந்து கே.எஸ். ரவிக்குமார்,யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி உள்ளிட்ட இன்னும் ஏராளமானோர் நடித்துள்ளார்கள். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து விட்டதாகவும் விரைவில் வெளியாகும் என்றும்  படக்குழுவினர்கள் அறிவித்துள்ளார்கள்.