இந்தப் புகைப்படத்தில் இருப்பவர்தான் தென்னிந்தியா சினிமாவின் டாப் நடிகை.! யார் என்று தெரிகிறதா.?

kajal agarwal
kajal agarwal

தமிழ் சினிமா உலகில் இருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களுடைய சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைவார்கள். அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் முன்னணி நடிகைஒருவரின் சிறு வயது புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால் இவரின் சிறு வயது புகைப்படம் தான் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. நடிகை காஜல் அகர்வால் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர். இவர் தமிழில் முதன் முதலாக சரோஜா என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து மோதி விளையாடு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

பின்பு தெலுங்கில் வெளியாகிய மகதீரா என்ற திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்தார். பின்பு தமிழில் மீண்டும் நான் மகான் அல்ல என்ற திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் அஜித், விஜய் ஆகிய முன்னனி நடிகர்களுடன் நடித்து வந்த காஜல் அகர்வால் தற்பொழுது கமலஹாசன் உடன் நடித்து வருகிறார்.

கமலஹாசன் அவர்களுடன் இணைந்து இந்தியன் 2 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் நடிகர் காஜல் அகர்வால் அவர்களுக்கு திருமணமாகி தற்பொழுது குழந்தையும் இருக்கிறது திருமணத்திற்கு பிறகு பெரிதாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த காஜல் அகர்வால் தன்னை தயார் படுத்திக் கொண்டு மீண்டும் பழைய துடிப்புடன் நடிக்க என்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்த வருடம் அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் கமலஹாசன் உடன் இணைந்து காஜல் அகர்வால் நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் பிரியா பவானி சங்கர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்தியன் 2 திரைப்படத்தை சங்கர் அவர்கள் பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

kajal agarwal
kajal agarwal