கணவனுடன் கூட்டு சேர்ந்து வேறு தொழிலில் இறங்கிய நடிகை காஜல் அகர்வால்..!

actress kajal agarwal latest business: திரை உலகில் முதல் முதலாக பழனி என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை காஜல் அகர்வால். இவ்வாறு படிப்படியாக தன்னுடைய சிறந்த நடிப்பை திரை உலகில் வெளிகாட்டியதன் மூலமாக முன்னணி நடிகர்களின் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

இதை தொடர்ந்து தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் நடிகை காஜல் அகர்வால் தற்சமயம் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

சமீபத்தில் தான் நடிகை காஜல் அகர்வாலுக்கு கௌதம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவ்வாறு திருமணம் நடைபெற்று முடிந்தாலும் தன்னுடைய சினிமா பயணத்தை மட்டும் நிறுத்தவே மாட்டேன் என நடிகை காஜல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகை காஜல் அகர்வால் கமல் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தியன்2 மற்றும் ஆச்சர்யா, கோஸ்டி போன்ற பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் தன்னுடைய கணவருடன் சேர்ந்து ஒரு புதிய தொழில் செய்து வருகிறார் என அரசல்புரசலாக செய்திகள் வெளியாகி உள்ளது.  அது வேறு ஒன்றும் கிடையாது வீட்டை அலங்கரிக்கும் பொருள்களை விற்பது மற்றும் அலங்கரித்து தருவது தான்.

kajal-honeymoon-pacakage
kajal-honeymoon-pacakage

Leave a Comment