நடிகை காஜல் அகர்வால் ஸ்லிம்மாக இருப்பதற்கு இந்த உணவுகளை தான் சாப்பிடுகிறாராம் இணையத்தில் வெளியான புதிய தகவல்.!

0

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை தான் காஜல் அகர்வால் இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கினார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் என்றாலும் இவரது திரைப்படங்களைப் பார்ப்பதற்காகவே ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்தது.

அந்த வகையில் பார்த்தால் இவர் தமிழில் நடித்த அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற இவரது நடிப்பில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது அது மட்டுமல்லாமல் தமிழில் நடித்ததன் மூலமாகவே இவர் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கு திருமணம் முடிந்து தனது கணவருடன் சேர்ந்து தனது கணவரின் தொழிலை கற்றுக் கொள்ள போவதாகவும் ஒரு தகவல் வெளியானது மிகவும் ஸ்லிம்மாக இருக்கும் காஜல் அகர்வால் என்னென்ன உணவு முறை எடுத்துக் கொள்வார் என்பது பற்றி ஒரு தகவல் கசிந்துள்ளது.

அதில் காஜல் அகர்வால் காலையில் எழுந்தவுடன் ஒரு முட்டையுடன் ஆரம்பிப்பாராம் அதற்குப் பின்பு ஜோவர் ரொட்டி சாப்பிடுவாராம் மதிய உணவுக்கு ஒரு சில பழங்களையும் சாப்பிட்டுவிட்டு காய்கறிகள்,பருப்புவகைகள்,சாதம் என மதிய உணவு மிகவும் சத்தாக உட்கொள்வதால் இவருக்கு நிறைய புரோட்டீன் சத்துக்கள் கிடைக்கிறது.இளநீர் மற்றும் புரோட்டீன் ஷேக் போன்ற குளிர்பானங்களை குடிப்பாராம்.

kajal e
kajal e

குறிப்பாக இவர் காலையிலும்,மாலையிலும் ஏர்ல் கிரே டீ கண்டிப்பாக குடித்து விடுவாராம் இவ்வாறு பல உணவு முறைகளை பின்பற்றுவதன் மூலம் காஜல் அகர்வால் மிகவும் ஸ்லிம்மாக இருக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இத்தனையும் பின்பற்ற வேண்டும் என்றால் அது உங்களால் மட்டும்தான் முடியும் எங்களுக்கு அது மிகவும் சிரமம் என கூறி வருகிறார்கள்.