நடிகர் காஜல் அகர்வாலின் வருங்கால கணவர் இந்த தொழிலதிபரா!! வைரலாகும் புகைப்படம்.

0

actress kajal agarwal fiance photo viral: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் முன்னணி நடிகர்களான விஜய், கார்த்தி, தனுஷ், அஜித், கமலஹாசன் என அனைத்து நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாகவே நடிகைகள் தங்களுக்கு முப்பத்தி ஐந்து வயதுக்கு மேல் ஆனால் கூட சினிமாவில் வாய்ப்பு உள்ளவரை திருமணம் என்பதை பற்றி நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள்.

ஆனால் சினிமாவில் வாய்ப்பு குறைய ஆரம்பித்தால் உடனே ஒரு தொழிலதிபரை பார்த்து திருமணம் செய்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள். அந்த வகையில் இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் தான் மிக எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக திரை வட்டாரங்களில் பேசப்பட்டது.

மேலும் கௌதம் என்கின்ற ஒரு தொழிலதிபரை இந்த கொரோனா பிரச்சனை முடிந்ததும் மிக பிரம்மாண்டமாக மும்பையில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்ப்போது அவரது வருங்கால கணவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

kaajal-agarwal
kaajal-agarwal