பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய காஜல் அகர்வால் !! இணையத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்.

0

actress kajal agarwal bachelour party photos viral: நடிகை காஜல் அகர்வாலுக்கு 35 வயது ஆகிறது ஒருவழியாக திருமணத்திற்கு தயாராகி விட்டார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் இவர் ராஜமௌலி இயக்கத்தில் மகதிரா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் பின்னர் அதனைத் தொடர்ந்து தமிழில் நான் மகான் அல்ல, மாற்றான்,  ஆல் இன் ஆல் அழகுராஜா, துப்பாக்கி,  ஜில்லா, மெர்சல் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கடைசியாக ஜெயம் ரவியுடன் இணைந்து கோமாளி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது அவர் இந்தியன்2 என்ற திரைப்படத்திலும் நடித்து கொண்டிருக்கிறார்.

இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் நடிகை காஜல் அகர்வால் தனது பெற்றோரின் விருப்பத்திற்கு ஏற்ப தொழிலதிபர் கௌதம் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதனைத் தொடர்ந்து இவருக்கு குடும்ப உறுப்பினர்களுடன் வருகின்ற அக்டோபர் 30ஆம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும் இந்த திருமண அறிவிப்பை தொடர்ந்து தனது தங்கையுடன் இணைந்து பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைபடத்தில் நடிகை காஜல் அகர்வால் மிகவும் அழகாக இருப்பதால் அதனை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

kajal-1
kajal-1
kajal467-
kajal467-
kajal4676
kajal4676
kajal578-
kajal578-