தஞ்சை அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகை ஜோதிகா!!

jothika 1
jothika 1

சில மாதங்களுக்கு முன்பு படம் சூட்டிங்கிற்காக தஞ்சாவூர் சென்ற ஜோதிகா அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையையும், தஞ்சாவூர் பெரிய கோவிலையும் பார்வையிட்டுள்ளார்.

இதுகுறித்து பொது நிகழ்ச்சி ஒன்றில் ஏன் கோவிலுக்காக இவ்வளவு ஆடம்பர செலவுகளை செய்கிறீர்கள் அதற்கு பதிலாக மருத்துவமனைகளுக்கும், பள்ளிக்கூடங்களும் செலவழிக்கலாம் என்று கூறியிருந்தார்.

இதற்கு பலர் ஜோதிகாவிற்கு எதிராக எதிர்ப்புகளை தெரிவித்திருந்தார்கள். பல சர்ச்சைகள் இணையதளங்களில் வெளிவந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது ஜோதிகா அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தாய்மார்களும் அவர்களுடைய சேவைகளும் பத்திரமாக இருப்பதற்காக கூடுதல் உதவிகள் தேவைப்படுகிறது என்பதை கேட்டு தெரிந்து கொண்டார்.

அந்த வகையில் இன்று 25லட்சம் ரூபாய் தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு நிதி உதவியாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை இயக்குனர் சரவணன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இடம் பணத்தை ஒப்படைத்துவிட்டார்.

ஜோதிகாவின் மீது ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இவருடைய மகத்தான உதவியால் பலர் பலன் பெறுவார்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் ஜோதிகாவை பாராட்டியுள்ளார்.