ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் டைட்டிலை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்.! செம்ம மாஸ்

0

தமிழ் சினிமாவில் ஜோதிகா முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் இவர் 1999 ஆம் ஆண்டு வாலி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதன் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார், பின்பு நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு சிறிது காலம் நடிக்காமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் மீண்டும் கதைக்கு முக்கியத்துவம் உள்ளார் திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், இவர் நடித்த நாச்சியார் திரைப்படம் ரசிகர்களிடம்  நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது இந்த நிலையில் சமீபத்தில் இவர் நடித்த ராட்சசி திரைப்படம் வெளியாகி திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது.

மேலும் தற்பொழுது ஜாக்பாட் என்ற திரைப்படத்தில் நடிகர் ரேவதியுடன்  நடித்து வருகிறார், மேலும் இயக்குனர் ஜெ ஜெ பெட்றிக் இயக்கத்தில் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.