யாரு பார்த்த வேலைடா இது.! இது என்ன ஜோதிகாவுக்கு வந்த கொடுமை.! வைரலாகும் வீடியோ.

நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இவர், அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார், ஒரு கால கட்டத்தில் தனது மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் பொழுதே நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இவர்களின் காதலுக்கு சூர்யா வீட்டில் சிறிதாக எதிர்ப்பு இருந்தது, பின்பு இருவரும் திருமண பந்தத்தில் இரு வீட்டார் சம்மதத்துடன் இணைந்தார்கள், திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்ட ஜோதிகா தற்போது மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

இவர் நடித்து வரும் படங்கள் அனைத்தும் நல்ல கதை உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், ஜோதிகாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் சந்திரமுகி, இந்த திரைப்படத்தில் சந்திரமுகி கதாபாத்திரமாக நடிகை ஜோதிகா நடித்து இருந்தார், அதே போல் இந்த படத்தில் உள்ள ‘ரா ரா’ பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது.

இந்த நிலையில் இந்த பாடலுக்கு பதிலாக சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள குமுறு டப்பார பாடலை பின்னணியில் இணைத்து அராஜகம் செய்து உள்ளார்கள் ரசிகர்கள்.

அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment