பாலா இயக்கத்தில் வெளிவந்த அவன் இவன் திரை படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஜனனி ஐயர். இத்திரைப்படத்தை தொடர்ந்து அசோக் செல்வனுடன் இணைந்து தெகிடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமடைந்தார்.
இத்திரைப்படத்தைக்கு பிறகு வேழம் என்ற திரைப்படத்திலும் அசோக் செல்வன் உடனும் இணைந்திருந்தார்.இவ்வாறு இவர் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஓரளவிற்கு தான் பிரபலம் அடைய முடிந்தது தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எக்கச்சக்கமான ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தவர்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகுதான் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்தார் அதோடு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த வகையில் நடிகர் பரத்துடன் இணைந்து யாக்கை திரி, முன்னரிவான் திரைப்படங்களிலும் பரத்திற்கு ஜோடியாக நடித்து.
இதனைக் தொடர்ந்து நடன இயக்குனர் நடிகருமான பிரபுதேவா இயக்கிவரும் பஹீரா திரைப்படத்தில் திரில்லர் மூவி யில் 7 பெண்களில் ஒருவராக நடிக்க உள்ளார். அதன்பிறகு அக்கட தேசத்தில் பல படங்களில் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜனனி ஐயர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை மயக்கும் அழகுகில் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் .அந்த வகையில் புடவையில் தனது கண்களால் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்.
