“டாடி மம்மி வீட்டில் இல்ல” பாட்டுக்கு செம குத்தாட்டம் போட்ட நடிகையை ஞாபகம் இருக்கிறதா.. இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க.!

Tamil Actress: திரைப்படங்களில் நடித்து பிரபலமாகி வரும் நடிகைகள் இருந்து வந்தாலும் அதே போல் ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர்களும் இருந்து வருகின்றனர். அப்படி டாடி மம்மி வீட்டில் இல்ல என்ற பாடலுக்கு நடனமாடி பிரபலமான அந்த நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் என்பது குறித்த புகைப்படம் வெளியாகி உள்ளது.

மும்பையை பூர்வீகமாகக் கொண்டவர் தான் ஜபின் கான். கந்தசாமி திரைப்படத்தில் யா பேரு மீனா குமாரி பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்த முமைத் கானின் உடன் பிறந்த சகோதரி தான் இந்த ஜபின் கான். இவர் டான்ஸராக பணியாற்றி வந்த நிலையில் மேலும் பல ஹிந்தி படங்களுக்கு உதவி இயக்குனராகவும் இருந்துள்ளார்.

அப்படி ஹல்சுல், ஏக் ஹசினா ஏக் கிலாடி உள்ளிட்ட மேலும் பல திரைப்படங்களுக்கு நடனமாடிய பிரபலமானார். இதன் மூலம் கௌதம மேனன் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில் ஐட்டம் பாடலான சிக்கிமுக்கி நெருப்பே என்ற பாடலில் தனது சகோதரி முமைத் கானுடன் இணைந்து டான்ஸ் ஆட வாய்ப்பு கிடைத்தது.

villu
villu

இந்த பாடல் மிகப்பெரிய அளவில் ரீச் அடைய இதனையடுத்து இருவரும் இணைந்து மேலும் வில்லு படத்தில் டாடி மம்மி வீட்டில் இல்லை என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார்கள். பிறகு ஜபின் கான் யாரடி நீ மோகினி படத்தில் ஓ பேபி ஓ பேபி என்ற பாடலுக்கு தனது சகோதரியின் துணை இல்லாமல் நடனமாடினார். இவ்வாறு தொடர்ந்து ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடி வந்த இவருக்கு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

villu actress
villu actress

எனவே சினிமாவை விட்டு விலகிய இவர் முபைக் கானுடன் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரீல்ஸ்கள் போட்டு சோசியல் மீடியாவில் சமீப காலங்களாக ஆக்டிவாக இருந்து வருகிறார். அப்படி இவர்களுடைய புகைப்படம் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.