நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை பச்சோந்தி என கேவலப்படுத்திய ரசிகர்கள்!! பாலுக்கும் தோழன் பூனைக்கும் காவலா.

0

actress iswarya rajesh insulted by fans: சினிமா உலகில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக  இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர். இவர் கருத்து சொல்கிறேன் என்று  தேவையில்லாமல் ஏதாவது ஒரு விஷயத்தில் மூக்கை நுழைத்து ரசிகர்களிடையே நல்ல வாங்கி கட்டிக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

பொதுவாகவே பிரபலமாகி விட்டால் தான் செய்வது அனைத்தும் சரி என்று நினைத்துக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள் திரைப் பிரபலங்கள். தற்போது ஒரு மாதமாக இந்தி திணிப்பு விவகாரம் போய்க் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

ஹிந்தி திணிப்பிற்கு எதிராக திரைப்பிரபலங்கள் i am a  தமிழ் பேசும் indian, ஹிந்தி தெரியாது போடா போன்ற அச்சிடப்பட்ட வாசகங்களுடன் கூடிய  டி-ஷர்ட் அணிந்து  ட்ரெண்டாக்கி வருகின்றனர். குறிப்பாக சாந்தனு-கீர்த்தி, யுவன் சங்கர் ராஜா மெட்ரோ ஷீரிஸ் போன்றோர் டீசர்ட் அணிந்து புகைப்படத்தை எடுத்து தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தனர்.

தற்போது இந்த செய்தி  தான் இந்தியா முழுவதும் டிரெண்டிங்கில் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சகோதரர்களுடன் இணைந்து டி-ஷர்ட் அணிந்த புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

இதனை பார்த்த வட இந்திய ரசிகர்கள்  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை அசிங்க படுத்தி வருகின்றனர். காரணம் என்னவென்றால் இவர் வட இந்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பிரபல சேனல் ஒன்றில் பேசும்போது முதலில் ஆங்கிலத்தில் பேசி விட்டு பிறகு ஹிந்தி தெரியும் என்று கூறி அந்த ஷோ முழுவதும் ஹிந்தியில் பேசியுள்ளார்.

அப்போது அப்படி பேசிய அவர் தற்போது ஹிந்தி தெரியாது போடா என்ற வாசகத்தை அச்சிட்ட டீசர்ட் அணிந்து தவறு என கூறி பச்சோந்தி போல் நடந்து கொள்வது தவறு என கூறி அவரை ரசிகர்கள் விமர்சிக்கின்றனர். உடனே அவர் அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கி உளளார்.தற்பொழுது இந்த செய்தி பரவி வருகிறது.