விஜயின் அடுத்த படத்திற்கு ரூட் விட்ட முன்னணி நடிகை.! எதற்கும் அசையாத படக்குழு.

0

தமிழ் சினிமாவில் தற்போது பாக்ஸ் கிங்காக விளங்கிவரும் தளபதி விஜய். இவருடன் இணைந்து எப்படியாவது ஒரு படம் நடித்து விட வேண்டும் என பல நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர்.அந்த வகையில் குறுகிய காலத்திலேயே தளபதி விஜய்யுடன் இணைந்து ஆட்டம் போட்டவர் தான் கீர்த்தி சுரேஷ்(keerthisuresh) இவர் விஜயுடன் இணைந்து பைரவா, சர்க்கார் போன்ற இந்த படங்களிலும் நடித்து மற்ற நடிகைகளை எரிச்சலடைய செய்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் தெலுங்கு சினிமாவில் சிறப்பாக நடித்துக் கொண்டிருந்த இவருக்கு திடீரென ஹிந்தியில் பட வாய்ப்பு ஒன்று கிடைத்தது இதனையடுத்து தனது உடல் எடையை குறைத்தார் கீர்த்தி சுரேஷ். உடல் எடையை குறைத்த கீர்த்தி சுரேஷை பார்த்த ரசிகர்களுக்கு  பிடிக்கவில்லை என்பதனை வெளிப்படுத்தும் விதமாக சமூகவலைதளத்தில் கிண்டலும் கேள்விகளையும் பதிவில் புலம்பியும் தள்ளினர்.

இந்த நிலையில் இந்தி பட வாய்ப்பு கை நழுவி போனது. மீண்டும் பட வாய்ப்பை பெறுவதற்காக தனது சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை குறைப்பதாக கூறினார் இருப்பினும் எந்த ஒரு சினிமா பட வாய்ப்பும் வராததால் தற்போது உடல் எடையை ஏற்ற தொடங்கியுள்ளார்.

சில தினகங்களுக்கு முன் தளபதி விஜய் பிறந்த நாளன்று வயலின் வாசித்து வாழ்த்து தெரிவித்தார் கீர்த்தி சுரேஷ். தற்போது அவருக்கு தமிழில் எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாததால் இது போன்று  வித்தியாசமாக எதாவது செய்தால் தான்  பட வாய்ப்பை பெற இவ்வாறு செய்கிறார் என ரசிகர் மற்றும் நெட்டிசன்கள் அவரை வருதேடுத்தனர். மேலும் அவரை எரிச்சல் அடைய செய்யும் வகையில் கோலிவுட் வாசிகள் தளபதி 65 படத்துக்கு படக்குழு ஹீரோயினை  கமிட் செய்து விட்டதாக சொல்லாமால் சொல்லிவருகின்றார்கள்.