பிரபல தொலைக்காட்சியில் தமிழ் சீரியலில் நடிக்கும் இனியா!! என்ன சீரியலுன்னு பாருங்க.

0

actress iniya acting in tamil serial:பல நடிகைகள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல வெற்றி படங்களை தொடர்ந்து தந்து கொண்டு இருந்து பிறகு சினிமாவில் மார்க்கெட்டிங் குறைந்து நடிக்காமல் இருந்து வருவார்கள். அந்த வகையில் இவர் நடித்த காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை இனியா.

இவர் தமிழ் சினிமாவிற்கு யுத்தம் செய் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இரண்டாவது படம் வாகை சூடவா இத்திரைப்படத்தில் தனது நடிப்பு திறமையை முழுவதும் வெளிப்படுத்தி இதற்காக தேசிய விருதையும் பெற்றார். இதனை தொடர்ந்து இவருக்கு ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இவர் பல படங்களில் நடித்து வந்தாலும் வாகைசூடவா திரைப்படத்தில் கிடைத்த வெற்றி மாதிரி வேறு எந்த படத்திலும் கிடைக்கவில்லை பிறகு இவரின் மார்க்கெட் சினிமாவில் குறைந்தது.

தற்போது இவருக்கென சொல்லும் அளவிற்கு எந்த ஒரு ரசிகர்களும் இல்லாமல் இருந்து வந்தது ஆனால் சில மாதங்களுக்கு முன்பு கேரளா உடையில் கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார் இதனை பார்த்த ரசிகர்கள் நம்ம வாகை பூச்சூடவா இனியாவா இது என்று ஆச்சரியப்பட்டார்கள்.

இந்நிலையில் சோஷியல் மீடியாவில் தற்போது வரையிலும் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிடுவதால் இவருக்கு என சொல்லுமளவிற்கு ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சினிமாவில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரைக்கு தாவியுள்ளார். அதாவது சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள கண்ணான கண்ணே என்ற சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் அதில் வில்லி ரோல்களில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஷூட்டிங் ஆரம்பமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.