40 வயது இயக்குனரை தனது காதல் வலையில் சிக்கவைத்த 23 வயது அணு இமானுவேல்.!

0
anu-emmanuvel-1
anu-emmanuvel-1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அனு இமானுவேல்.

இதனைத் தொடர்ந்து  சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த எங்க வீட்டு மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இதற்கு முன்பு இவர் மலையாளத்தில் ஆக்சன் ஹீரோ பிஜீ திரைப்படத்தின் மூலம் 2016ஆம் ஆண்டு சினிமா உலகிற்கு அறிமுகமானார்.இதனைத்தொடர்ந்து தெலுங்கிலும் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் 40 வயது இயக்குனரை காதலித்து வருகிறார் என்ற செய்தி சமூக வலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வைரலாகி வருகிறது. மட்டுமல்லாமல் அந்த இயக்குனருடன் காதலை கொண்டாடும் விதமாக மிகவும் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறாராம்.

அது வேறு யாருமில்லை தெலுங்கில் ஆக்ஸிஜன் திரைப்படத்தை 2017ஆம் ஆண்டு இயக்கிய ஜோதி கிருஷ்ணா தான். ஜோதி கிருஷ்ணா 40 வயதாகும் இயக்குனர்.

இவர் பிரபல தயாரிப்பாளரான ஏஎம் ரத்னத்தின் மூத்தமகன் ஆவார். நடிகை இமானுவேல் மற்றும் இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இருவரும் ஆக்சிஜன் படப்பிடிப்பின்போது மிகவும் நெருக்கமாக இருந்ததாக அப்பொழுதே தீயாய் பத்திரிகையில் பரவியது.

இந்நிலையில் தற்பொழுது இருவரும் சுற்றுலா தலங்களுக்கு செல்வது என்று கிளம்பி விடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அங்கு சென்று மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

அனு இமானுவேல்  தன் காதலை பற்றி  எதுவும் கூறவில்லை. இந்நிலையில் அனு இமானுவேல் திருமணம் செய்து கொண்டு திரைப்படங்களில் நடிக்காமல் கிளம்பி விடுவாரோ என்று ரசிகர்கள் மற்றும் தயாரிப்பாளர் அச்சப்பட்டு வருகிறார்கள்.