கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் ரகசிய திருமணம் செய்துக் கொள்ள இருக்கும் விஜய் பட நடிகை.!

பொதுவாக சினிமாவை பொருத்தவரையிலும் ஏராளமான பிரபலங்கள் தங்களுக்கு பிடித்தவர்களுடன் திருமணம் செய்து கொண்டு வாழலாம் இவ்வாறு திருமணம் பிடிக்கவில்லை என்றாலும் விவாகரத்து செய்துவிட்டு அப்பொழுது யாரை பிடிக்கிறதோ அவர்களுடனும் வாழலாம் எத்தனை பேர் உடன் வேண்டுமானாலும் வாழலாம் எந்த ஒரு கட்டாயமும் கிடையாது.

அவரவர்களுடைய விருப்பத்திற்கு அப்பொழுது என்ன தோன்றுகின்றதோ அதனை செய்து வருகிறார்கள் அதுவும் சமீப காலங்களாக திருமணம், விவாகரத்து என அடிக்கடி நடைபெற்று வருகிறது. மேலும் திருமணம் செய்துக் கொள்ளலாமல் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வரும் ஏராளமான பிரபலங்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் பிரபல நடிகை தற்போது ரகசிய திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு தமிழ், பாலிவுட் என கலக்கி வரும் நடிகை தான் இலியானா. இவர் தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பெரிதாக பிரபலம் கிடைக்கவில்லை இப்படிப்பட்ட நிலையில் விஜய்யுடன் நண்பன் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய ரீசினை பெற்று தந்தது.

இதனை அடுத்து தெலுங்கில் மகேஷ் பாபு உடனே இணைந்து போக்கிரி திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றினை தந்த நிலையில் தொடர்ந்து ஏராளமான தெலுங்கு முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். இப்படிப்பட்ட நிலையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இலியானா சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் ஆனால் இவருடைய கணவர் யார் என்று தெரியாது எனவே ரசிகர்கள் இலியானாவுக்கு திருமணம் ஆகிவிட்டதா என அதிர்ச்சடைந்தார்கள்.

iliyana
iliyana

இதுவரையிலும் இவருடைய கணவர் யார் என தெரியாமல் இருந்து வரும் நிலையில் சமீபத்தில் கையில் மோதிரம் மாற்றிக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இலியானா மும்பையை சேர்ந்த தொழிலதிபரை விரைவில் ரகசிய திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாகவும் இது குறித்து தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Leave a Comment