பொது நிகழ்ச்சியில் இந்த நடிகரை பார்த்து நான் மிகவும் பயந்தேன் என்று கூறிய நடிகை ஹனிரோஸ்.!

0
honey-rose
honey-rose

வீராப்பு,  தில்லு முல்லு ஆகிய திரைப்படங்களை இயக்கிய சுந்தர் சி யன் உதவியாளரான இயக்குனர் பத்ரி பட்டாம்பூச்சி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.  இத்திரைப்படத்தில் நடிகர் ஜெய் மற்றும் சுந்தர் சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

மேலும் சுந்தர் சி இத்திரைப்படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும், ஜெய்  சீரியல் கொலைகாரனாகவும் நடித்துள்ளார்.  மேலும் இத்திரைப்படம் 80 களில் நடக்கும் சைக்கோ கொலைகாரன் மற்றும் போலீஸ் அதிகாரி இவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டிருக்கும் வலைத்தளத்தில் உருவாகியுள்ளது.

இத்திரைப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடிகை ஹனி ரோஸ் நடித்துள்ளார்.  இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிய உள்ள நிலையில் இந்த திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள ஹனி ரோஸ் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதாவது “எனது முதல் படமான முதல் கனவே இப்படத்திற்கு பிறகு ஜீவாவுடன் சிங்கம், புலி படத்தில் நடித்தேன்.  இதனைத் தொடர்ந்து சில தமிழ் திரைப் படங்களிலும் நடித்தேன்.  நல்ல ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பியதால் ஒரு இடைவெளி எடுத்தேன். அதிர்ஷ்டவசமாக அதே நேரத்தில் நான் மலையாளத்தில் சுவாரசியமான படங்களில் தொடர்ந்து நடித்து வந்தேன்.

இதன் காரணமாகத்தான் தமிழில் நீண்ட இடைவெளி உருவானது.  மேலும் தமிழ் எனக்கு மிகவும் பிடித்த மொழி எப்பொழுதும் தமிழ் பேசுவது எனக்கு உற்சாகமாக இருக்கும் ரஜினி சார் மற்றும் விஜய் சார் படங்களை நான் அடிக்கடி பார்ப்பேன்.  எனவே தமிழ் பேசுவது எனக்கு மிகவும் எளிமையான ஒன்று நான் விஜய் சாரின் மிகத் தீவிர ரசிகை.

பட்டாம்பூச்சி படத்தில் இணைந்தது எப்படி என்று கேள்வி எழுப்பினர் அதற்கு,” தயாரிப்பு நிறுவனம் எனக்கு போன் செய்து இந்த மாதிரியான இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.  பத்ரி சார் என்னிடம் கதையை கூறினார், அது எனக்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது அதை அடுத்து அவர் எனக்கு இப் படத்தின் ஸ்கிரிப்ட்டை அனுப்பினார்.

இப்படி திரைப்படத்தின் திரைக்கதை மிகவும் அற்புதமாக இருந்தது குறிப்பாக எனது கதாப்பாத்திரத்தை கூறலாம். இத்திரைப்படத்தில் சில கதாபாத்திரங்கள் மட்டுமே உள்ளன மற்றும் எனது கதாபாத்திரம் முக்கியமான ஒன்றுதான் இப்படத்தில் பத்திரிக்கை நிருபராக நடித்துள்ளேன்.  மேலும் இப்படத்தில் நான் ஜெய்யுடன் அடிக்கும் போதெல்லாம் அவரிடம் ‘ஐய்யோ,  நீங்க வந்தீங்க அவை எனக்கு பயமா இருக்கு’ என்று அவரிடம் சொன்னேன்.

மேலும் பத்திரிக்கை நிருபர்கள் என்றால் எப்படி ஆடை அணிய வேண்டும் என்பதை பற்றிய ஏராளமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்தேன்.  அதில் 80களில் கணி மேடம் பிரபல பத்திரிகையாளராக இருந்தார்,  அவருடைய தோற்றத்தில் இருந்து சில குறிப்புகளை எடுத்து இருக்கிறேன்”.  என்றார்.