காதல் கோட்டை, அவ்வை சண்முகி என பல ஹிட் திரைப்படங்களில் நடித்த நடிகை ஹீராவா இது.? 51 வயதில் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கிறாரே..

heera-rajagopal
heera-rajagopal

ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து பல மொழி திரைப்படங்களிலும் நடித்து மிகவும் பிசியாக இருந்து வந்து குறிப்பிட்ட காலத்தில் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வரும் பல நடிகைகள் இருந்து வருகிறார்கள் மேலும் இவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல மார்க்கெட் இருந்தும் ஒரு சில காரணங்களினால் சினிமாவில் தலை காட்டாமல் இருந்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ், தெலுங்குz கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருந்து வந்தவர் தான் நடிகை ஹீரா ராஜகோபாலன் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வந்தது இவருடைய வசீகரமான உடலமைப்பு பலரையும் கவர்ந்தது.

மேலும் இவர் தமிழில் இதயம், நீ பாதி நான் பாதி, திருடா திருடா, சதிலீலாவதி, காதல் கோட்டை, அவ்வை சண்முகி என பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார் மேலும் ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு அந்தஸ்தை பிடித்தார்.

இப்படிப்பட்ட நிலையில் கடைசியாக இவர் 1999ஆம் ஆண்டு சுயம்வரம் என்ற படத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு இவர் சினிமாவை விட்டு மொத்தமாக விலகி விட்டார் இதுவரையிலும் ஒரு திரைப்படங்களில் கூட நடிக்கவில்லை. இருந்தாலும் ரசிகர்கள் தற்பொழுது வரையிலும் இவரை ஞாபகம் வைத்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் கலந்து 2002ஆம் ஆண்டு புஷ்கர் மாதவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு 2006ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர் தற்பொழுது 51 வயதாகும் ஹீரா திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார்.

heera rajagopal 1
heera rajagopal 1

மேலும் சினிமாவை விட்டு விலகி இருந்தாலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் சமீபத்தில் இவருடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் 51 வயது ஆகியும் கொஞ்சம் கூட அழகு குறையாமல் அப்படியே இருக்கிறாரே என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.