நடிகை ஹன்சிகாவின் மார்க்கெட் உயராமல் இருக்க காரணமே.. 50 வது படம் தானாம்.?

சினிமா உலகில் கொழுக் மொழுக்கென்று இருக்கும் நடிகைகளுக்கு எப்பொழுதும் வாய்ப்புகள் குவியும் அந்த வகையில் இளம் வயதிலேயே கொழுக் மொழுக்கென்று இருந்து கொண்டு வலம் வந்ததால் வாய்ப்புகள் ஏராளமாக கிடைத்ததில் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விஜய் சூர்யா தனுஷ் சிம்பு போன்றவர்களின் படங்களில் நடித்து அசத்தினார்.

இப்படியான படங்களில் நடித்து வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாலும் அதேசமயம் ஹன்சிகாவின் உடல் எடை அதிகரித்துக் கொண்டே போனது குறைந்த வயதிலேயே ஆண்டி போல் மாறியதால் ரசிகர்கள் இவரை கமெண்ட்டுகள் மூலம் திட்டித் தீர்த்தனர். இதனையடுத்து நடிகை ஹன்சிகா சினிமா உலகில் நடிப்பதை தவிர்த்து விட்டு தனது உடல் எடையை குறைப்பதில் அதிகம் கவனம் செலுத்தினார்.

ஒருவழியாக ஜிம்மே கதி என்று கிடந்து உடல் எடையை அதிரடியாக குறைக்க அவதாரம் எடுத்திருக்கிறார். அதனை ரசிகர்களுக்கும் வெளிக்காட்டும் வகையில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அசத்தினார். இப்படி இருக்கின்ற நிலையில் வாய்ப்புகளும் ஒவ்வொன்றாக கிடைக்கத் தொடங்கியுள்ளன அந்த வகையில் தமிழில் இவர் தனது 50-வது திரைப்படமான மஹா படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ஆனால் படம் ரிலீசாகாமல் இருக்கிறது அதனை தொடர்ந்து ரவுடி வீதி என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நீங்கள் நடித்த 50-வது திரைப்படமான மஹா திரைப்படம் ஏன் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது என கேள்வி கேட்டனர். 50-வது திரைப்படமான மஹா திரைப்படத்திற்காக நானும் பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கிறேன் நம் கையில் எதுவும் இல்லை..

நிச்சயம் வெளிவந்து படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என்ற நம்பிக்கை மட்டுமே இருப்பதாக கூறினார் ஹன்சிகா. படம் வெளிவராமல் இருக்க காரணம் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் இடையே உள்ள பிரச்சனை தான் காரணம் என கூறப்படுகிறது. 50வது படம் வெற்றிப்படமாக ஹன்சிகாவுக்கு அமையும் பட்சத்தில் அடுத்தடுத்த பட வாய்ப்பை பெருவார் என கணிக்கப்பட்டுள்ளது ஆனால் அதுவரை ஹன்சிகாவின் நிலைமை அதோ கதிதான்.

Leave a Comment