ஹன்சிகாவுடன் இணைந்த தமிழ் பிக்பாஸ் டைட்டில் வின்னர்.! வைரலாகும் மோஷன் போஸ்டர்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஹன்சிகா திருமணத்திற்கு பிறகு தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் ஹீரோவாக தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் நடிக்க இருக்கிறார் அது குறித்த போஸ்டர் தற்பொழுது வெளியாகி உள்ளது.

நடிகை ஹன்சிகா சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான நிலையில் சமீப காலங்களாக தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் கடைசியாக இவருடைய 50வது படமான ‘மஹா’ என்ற படம் வெளியாகி கலவை விமர்சனத்தை பெற்றது.

இவருடைய 50வது பாடத்தில் இவருக்கு ஜோடியாக நடிகர் சிம்பு நடித்திருந்த நிலையில் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய தோல்வினை பெற்றது இந்த படத்திற்குப் பிறகு சமீபத்தில் இவருடைய திருமணம் நடைபெற்று முடிந்தது.

எனவே இதில் பிசியாக இருந்து வந்த இவர் தற்பொழுது 7 திரைப்படங்களில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகி இருக்கிறார். இவ்வாறு திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடித்த மிகவும் பிசியாக இருந்து வரும் ஹன்சிகாவின் அடுத்த படத்தினை இகோர் இயக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியான நிலையில் தற்பொழுது மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் ஹன்சிகா, ஜனனி துர்கா, சௌமிகா பாண்டியன் மற்றும் தமிழ் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி உள்ளிட்ட பலரும் இணைந்து நடிக்க உள்ளனர். மெட்ராஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்க, மணிகண்டன் ஒளிப்பதிவில், சரண்யா பாக்யராஜ் திரைக்கதையையும், பொன் பார்த்திபன் வசனமும் எழுதியுள்ளார்.

man movie
man movie

இந்த படத்திற்கு ‘மேன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் “ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு முகமூடி உண்டு” என்ற கேப்ஷனுடன் உடன் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.