மகா திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த திரைப்படத்தில் அடியெடுத்து வைக்கும் நடிகை ஹன்சிகா..! உங்களுக்கு ஏத்த பீசு நான்தான் என அடிபோடும் நடிகர்கள்..!

0

actress hansika latest movie update: தமிழ் திரை உலகில் ஒரு நேரத்தில் ஓஹோவென இருந்து வந்த நடிகை தான் ஹன்சிகா இவர் சமீபத்தில் தன்னுடைய 50-வது திரைப்படமான மகா திரைப்படத்தில் நடித்துள்ளார் இத்திரைப்படத்தின் டிரைலர் கூட சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தந்தனர்.

இந்த திரைப்படத்தின் சிறப்பு என்னவென்றால் நடிகர் சிம்பு இந்த திரைப்படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளாராம். அதாவது ஹன்சிகாவிற்கு முன்னாள் காதலனாக நடிகர் சிம்பு இந்த திரைப்படத்தில் நடித்ததன் காரணமாக இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துவிட்டது.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படம் இணையத்தில் தான் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன இந்நிலையில் தன்னுடைய அடுத்த திரைப்படத்தைப் பற்றிய அப்டேட்களை நடிகை ஹன்சிகா  தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்தவகையில் இவர் அடுத்ததாக நடிக்கப்போகும் திரைப்படம் தமிழ் திரைப்படம் கிடையாதாம் தெலுங்கு திரைப்படத்தில் தான் நடிக்க உள்ளதாக திரைப்படத்தின் பெயர் மை நேம் இஸ் சுறுதி.இன்நிலையில் இதனை தொடர்ந்து படத்தின் பூஜை கூட சமீபத்தில் மிக சிறப்பாக முடிவடைந்த நிலையில் உள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிக்க போகும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் கமலுக்கு மிக நெருக்கமான நடிகர் ஒருவர் தான் கதாநாயகனாக நடிக்க உள்ளாராம்.

மேலும் இத்திரைப்படத்தை ஸ்ரீநிவாஸ் ஓம்கார் என்பவர்தான் இயக்க உள்ளாராம் அதேபோல இந்த திரைப்படத்தின் இசை மார்க் ராபின் என்பவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவருமே அவர்களுடைய பணியில் மிகச்சிறப்பு மிக்கவர் ஆகையால் இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துவிட்டன.

hansika-1
hansika-1