தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் முக்கிய நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ஹன்சிகா தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இவ்வாறு பிரபல நடிகையான ஹன்சிகா நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
நடிகை ஹன்சிகாவின் நடிப்பில் மஹா உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்கள் விரைவில் வெளியாக தயாராக உள்ளது. இத்திரைப்படத்தினை தொடர்ந்து ஹன்சிகா முக்கிய வேடத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
இப்போதெல்லாம் ஏராளமான நடிகைகள் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும், ரொமான்ஸ்சாகவும் நடிக்காமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்கு முன் உதாரணமே சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான்.
இந்நிலையில் நாயகியாக முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் ஹன்சிகா நடிக்கும் திரைப்படத்தில் பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர் ஆரி வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் முக்கிய வேடத்தில் ஜனனி துர்கா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அப்படிப்பட்ட நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சமீபத்தில் நடைபெற்று வருவதாகவும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆர்யா நடிப்பில் வெளிவந்த கலாபக் காதலன் என்ற திரைப்படத்தை இயக்கிய இகோர் என்பவர்தான் இப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மதுரை, பொள்ளாச்சி உள்ளிட்ட சில இடங்களில் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.