ஹனிமூனை கொண்டாட ஆஸ்திரேலியா பறந்த நடிகை ஹன்சிகா.. க்யூட் புகைப்படங்கள் இதோ.!

தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா. இவரை ரசிகர்கள் அனைவரும் செல்லமாக குட்டி குஷ்பு என கூப்பிட்டு வந்தனர் அந்த அளவிற்கு கொழுக் மொழுக் என இருந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் முதலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் பருவ வயதை எட்டிய பிறகு ஹீரோயின்னாக நடிக்க தொடங்கினார்.

தமிழில் மாப்பிளை என்னும் திரைப்படத்தில் நடித்த அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து நடிகை ஹன்சிகா தளபதி விஜயின் வேலாயுதம், ஜெயம் ரவி உடன் எங்கேயும்காதல் அதை தொடர்ந்து அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார் மேலும் ரசிகர்களும் இவருக்கு கிடுகிடு என உயர்ந்தனர்.

தமிழில் வெற்றி கண்ட இவர் ஒரு கட்டத்தில் பிற மொழிகளிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதிலையும் திறன்பட நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார் இப்படி ஓடிக்கொண்டிருந்த நடிகை ஹன்சிகா திடீரென தனது நண்பரும் தொழிலதிபருமான சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்.

அதன்படி ஜெய்பூர் அரண்மனையில் இவர்களது திருமணம் கோலாக்கலமாக நடந்து அரங்கேறியது அதன் பிறகு இவர் திருமண உணவுகளை ஆதரவற்ற மற்றும் இல்லாதவர்களுக்கு கொடுத்து இந்திய முழுவதும் நற்பெயரை ஹன்சிகா பெற்றார். திருமணம் ஆன பிறகு நடிகை ஹன்சிகா மாமியார் வீட்டிற்கு போன உடனேயே இனிப்பான அல்வா செய்து உறவினர்கள்..

மற்றும் முக்கியமானவர்களுக்கு கொடுத்து அசத்தினார் அதன் புகைப்படங்கள் வேற லெவலில் வைரலான நிலையில் தற்போது ஹனிமூனுக்காக இந்த ஜோடி ஆஸ்திரேலியாவுக்கு  சென்றுள்ளது. அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது.  இதோ நீங்களே பாருங்க அந்த லேட்டஸ்ட் புகைப்படத்தை..

hanshika
hanshika

Leave a Comment