நடிகர் தனுஷ் மற்றும் சுருதிஹாசன் கூட்டணியில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 3. இத்திரைப்படம் இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்திருந்தது. இத்திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் நடிகை கேப்ரியலா.
இத்திரைப்படத்தில் சுருதிஹாசனின் தங்கையாக நடித்து பிரபலமடைந்தார். இவர் தனது சின்ன வயதிலேயே டான்ஸ் மீது அதிக ஆர்வம் இருந்ததால் டான்ஸராக தனது கெரியரை தொடங்கினார். அந்த வகையில் சின்னத்திரையின் ஜோடி நம்பர் ஒன் டான்ஸ் ஷோவில் கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார்.
பிறகு சமுத்திரகனியின் படமான அப்பா உட்பட இன்னும் சில படங்களில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இவர் பிரபலம் அடைந்து இருந்தாலும் கதாநாயகியாக நடிப்பதற்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே தொடர்ந்து தனது சோஷியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மாபெரும் ஷோ பிக்பாஸ் சீசன் 4 கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்த இவர் எப்படியும் வெற்றி அடைய மாட்டோம் என்பதை அறிந்து நிகழ்ச்சி முடிய உள்ள கட்டத்தில் 5 லட்ச ரூபாய் பெட்டியை எடுத்துக்கொண்டு யாரும் எதிர்பார்க்காத நிலையில் இந்நிகழ்ச்சி விட்டு வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து கேப்ரில்லா சில படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்ற கூறப்படுகிறது. ஆனால் தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தொடர்ந்து கேப்ரில்லா தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது கிழிந்த பேண்டில் மிகவும் ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.