54 வயதில் தனது மகளுக்கு தங்கை போல் இருக்கும் நடிகை கௌதமி.! லைக்ஸ்கள் அல்லும் புகைப்படம்..

gawdhami-4

பல நடிகைகள் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் தொடர்ந்து தங்களுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகை கௌதமி தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் மகளுக்கு டப் கொடுக்கும் அழகில் கௌதமி இருக்கிறார் என கூறி வருகிறார்கள்.

ரஜினி நடிப்பில் வெளிவந்த குரு சிஷ்யாம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் கௌதமி. இந்த படத்தை அடுத்து தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கலக்கி வந்த இவர் சமீப காலங்களாக தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

90 காலகட்டத்தில் முன்னணி அவர்களாக வலம் வந்த ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், ராமராஜன், சத்யராஜ் ,பிரபு உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்திற்கு பிறகு அரசியலிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

gawdhami 1
gawdhami 1

அந்த வகையில் பாஜகவில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் இவர் பிறகு சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கமலஹாசன் அவர்களுடன் இணைந்து பாபநாசம் படத்தில் நடித்திருந்தார். இப்படிப்பட்ட நிலையில் தன்னுடைய மகள் சுப்புவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிலையில் அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

gawdhami
gawdhami

அதேபோல் இவருடைய மகள் சற்று முன்பு தனது அம்மாவுடன் இருக்கும் க்யூட் புகைப்படங்கள் என கூறி புகைப்படங்களை வெளியிட்டிருந்த நிலையில் கௌதமி 54 வயது ஆனாலும் கூட தன்னுடைய மகளுடன் பார்க்கும் பொழுது அக்கா தங்கை போல் மிகவும் அழகாக க்யூட்டாக இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

gawdhami 2
gawdhami 2