சினிமா உலகில் டாப் இயக்குனர்கள் கூட சமீப காலமாக திறமை வாய்ந்த நடிகைகளை எங்கு இருந்தாலும் தட்டி தூக்கி தனது படங்களில் நடிக்க வைக்கின்றனர் அந்த வகையில் தமிழ் சினிமாவில் வலம் வரும் டாப் நடிகைகளை கழட்டிவிட்டு இயக்குனர்கள் மற்ற மொழிகளில் வரும் இளம் நடிகைகளை அழைத்து வந்து நடிக்க வைக்கின்றனர்.
அதனால் சமீபகாலமாக டாப் நட்சத்திரங்களின் படங்களில் புதுமுக நடிகைகள் நடித்து அசத்துகின்றனர். அந்த வகையில் இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் “சார்பட்டா பரம்பரை”. இந்த திரைப்படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை துஷாரா விஜயன்.
சினிமாவில் நடிப்பதற்கு முன்பாக அவர் ஃபேஷன் டெக்னாலஜி முடித்துவிட்டு மாடலிங் துறையில் வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் சின்ன சின்ன படங்களில் நடித்து தற்போது தனது திறமையை வளர்த்துக்கொண்டு தென்னிந்திய சினிமாவில் பல்வேறு திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா உலகில் ஓடிக் கொண்டிருக்கும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் மிக முக்கியம் என்பதால் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு புகைப்படங்களை அள்ளி வீசி மக்கள் மற்றும் ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார். இப்படி இருக்க சமீபத்தில் இவர் நீங்கள் யாருடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்.

என கேட்டதற்கு நான் தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷுடன் நடிக்க ஆசை தெரிவித்துள்ளார். துஷாரா விஜயன் தற்பொழுது வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.