வாரிசுகள் படையெடுப்பது சினிமாவுக்கு ஒன்றும் புதிது கிடையாது. ஆனாலும் இப்போதெல்லாம் திறமை இருந்தால் தான் பல வருடங்கள் தாக்குபிடிக்க முடியும் என்ற நிலை இருக்கிறது.
ஏற்கனவே பிரபலங்களின் வாரிசுகள் இயக்குனர் ஹீரோ ஹீரோயின் என லைம் லைட்டில் இருக்கின்றனர். அப்படித்தான் நடிகை தேவயானியின் மகளும் இப்போது ஹீரோயின் ஆக களம் இறங்க இருக்கிறார்.
இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்ட தேவயானிக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அதில் முதல் மகள் இனியா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அதன் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இறுதிப்போட்டி வரை வர முடியவில்லை என்றாலும் இனியாவின் குரலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதை தொடர்ந்து அவர் இப்போது ஹீரோயின் ஆக நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.
பல திறமைகள் கொண்ட இனியாவுக்கு இது மற்றொரு அடையாளமாகும். அதன்படி தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கோர்ட் என்ற படத்தின் ரீமேக் உரிமையை தியாகராஜன் வாங்கியிருக்கிறார்.
அந்த படத்தில் நான் இனியா நாயகியாக அறிமுகமாக இருக்கிறார். ஆனால் இது அதிகாரப்பூர்வமான தகவலாக வரவில்லை. கோடம்பாக்க வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த செய்தி விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று தெரிகிறது.