தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நடந்து முடிய உள்ள நிலையில் அத்திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் பெரிதளவில் எதிர்பார்த்து காத்து வருகிறார்கள். இந்நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ஆரபிக்குத்து பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
அந்த வகையில் முன்னணி நடிகைகளான சமந்தா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா என தொடர்ந்து இன்னும் ஏராளமான முன்னணி நடிகைகள் மற்றும் ஏராளமான நடிகர்கள், ரசிகர்கள் என்று அனைவரும் அரபி குத்து பாடலுக்கு நடனமாடி அதனை சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஆஷ்னா ஜாவேரி சமீபத்தில் அரபிகுத்துப் பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவதோடு மட்டுமல்லாமல் லைக்குகளையும்,கமெண்டுகளையும் அள்ளி குவித்து வருகிறார்கள்.
ஆஷ்னா ஜாவேரி சந்தானம் நடிப்பில் வெளிவந்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்றி கொடுத்தார். இத்திரைப்படத்தினை தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களிலும் இவர் ஹீரோயினாக நடித்து இருந்தாலும் சொல்லும் அளவிற்கு இன்னும் சினிமாவில் பிரபலமடையவில்லை.
இந்நிலையில் சமீப காலங்களாக இவர் தரமான கதை உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதாக கூறப்படுகிறது. இவர் பெரிதாக திரைப்படங்களில் நடித்து பிரபலமடையவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
Worked out on #HalamithiHabibo 😂 such a catchy tune 💃 #ThalapathyVijay @actorvijay @sunpictures @anirudhofficial #BeastFirstSingle pic.twitter.com/zkF7QJAmTY
— Ashna Zaveri (@ashnazaveri) March 11, 2022