சித்ராவின் வழக்கில் திடீர் திருப்பம்.! அவசர அவசரமாக சித்ராவின் நகம் மற்றும் மொபைல் ஆய்வு.!

சின்னத்திரையில் கொடிகட்டி பறந்து வந்த சித்தரா தனியார் விடுதியில் டிசம்பர் 9ஆம் தேதி இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அதுமட்டுமல்லாமல் இவர் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக பலரும் கூறி வந்த நிலையில் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இவர் தற்கொலைக்கு தூண்டியதாக சித்ராவின் காதல் கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டார். மேலும் டிசம்பர் 14ஆம் தேதி ஹேமந்த் மற்றும் சித்ரா இருவருக்கும் தகராறு நடைபெற்றதாக கூறப்படுகிறது ஆனால் ஹேமந்த் சித்ராவின் தற்கொலைக்கு எந்தவிதத்திலும் எனக்கு சம்மந்தம் இல்லை எனக் கூறி ஜாமீன்  கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது அதேபோல் வழக்கை குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது மேலும் 13 சாட்சிகளை மீண்டும் மீண்டும் துருவித்துருவி விசாரணை செய்தார்கள்.  அதில் வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்யவில்லை என்றும் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் உறுதி செய்யப்பட்டது.

chitra-vj
chitra-vj

இந்த நிலையில் தற்போது அந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.  ஆனால் சித்ராவின் நகங்கள் மற்றும் சித்ராவின் தொலைபேசி உரையாடல்கள் அனைத்தையும் தடவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் இருந்து அதிரடியாக தெரிவிக்கப்பட்டது.

அதனால் இந்த வழக்கை பிப்ரவரி 11ஆம் தேதி விசாரிக்கப்படும் என நீதிபதி கூறினார் அதுமட்டுமில்லாமல் சித்ராவின் நகம் மற்றும் தொலைபேசி உரையாடல் அனைத்தின் முடிவுகளும் பிப்ரவரி 10ஆம் தேதி வந்துவிடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

எனவே வருகின்ற 11ம் தேதி சித்ராவின் தற்கொலைக்கு ஒரு முடிவு வந்துவிடும் என பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Comment