சினிமாவில் முன்னணி நடிகை ஒருவரை பிக்பாஸில் கலந்து கொள்ளுமாறு வற்புறுத்தும் பிரபலம்.! அதற்க்கு அந்த நடிகை கூறிய பதிலை பாருங்கள்

விஜய் டிவியில் கடந்த நான்கு வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். பிக்பாஸ் சீசன் 4  ஜனவரி மாதம்தான் நிறைவடைந்தது. விரைவில் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாக அதற்காக முதற்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.

பொதுவாக இந்நிகழ்ச்சி சினிமாவில் பிரபலமடைய முடியாமல் தவித்து வரும் பலருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல இமேஜ்வுடன் இருக்கும் பலர் இந்நிகழ்ச்சியில் தங்களது மொத்த இமேஜை டேமேஜ் செய்து கொள்கிறார்கள்.

இதன் காரணமாகத் தான் பலர் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள தயங்குகிறார்கள். அந்த வகையில் பிரபல முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த வந்த ஒருவரை தற்பொழுது சில காலங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று படாத பாடு படுத்துவதாகவும் ஆனால் அந்த பிரபல நடிகையை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறி உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

விஜய் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் பத்ரி இந்த திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பூமிகா.  இவரின் முதல் படமே விஜய்க்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றியை பெற்றது.

இதன் மூலம் பிரபலமடைந்த பூமிகா தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து மிகவும் ஆக்டிவாக இருந்து வந்தார். பொதுவாக நடிகைகள் என்றாலே ஒரு கட்டத்திற்குப் பிறகு அவர்களால் கதாநாயகியாக நடிப்பதற்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்காது அந்த வகையில் பூமிகாவும் சிறிது காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் சொந்த தொழில் ஒன்றை ஆரம்பித்து அதில் கவனம் செலுத்தி வந்தார் தற்போதுதான் மீண்டும் குணசித்திர நடிகையாக நடித்து வருகிறார்.  இவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு ஒரு பிரபலம் மிகவும் வற்புறுத்தி வந்தாராம் ஆனால் பூமிகா திட்டவட்டமாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார்.

poomika

நான் கேமரா முன் நடிக்கத்தான் விரும்புகிறேன் கேமரா முன் வாழ விரும்பவில்லை என்று கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது இதற்கு ஏற்கனவே பிக்பாஸ் 1,2,3,4 கலந்து கொள்வதற்கு வாய்ப்புகளை கேட்டுள்ளார்கள்.

Leave a Comment

Exit mobile version