சினிமாவில் நடிக்க ஆசைப்படும் நடிகைகள் பலரும் ஆரம்பத்தில் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி பின்பு மென்மேலும் உயர்ந்து அதன் மூலம் சினிமா வாய்ப்பை கைப்பற்றுகின்றனர். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னதம்பி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாவணி ரெட்டி.
இவர் ஆரம்பத்தில் தெலுங்கு சீரியலில் நடித்து தெலுங்கு சீரியல் நடிகரானார் பிரதீப் என்பவரை காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த வந்த நிலையில் பிரதீப் சில காரணங்களால் தற்கொலை செய்து கொண்டார். அதன்பின் தனது கேரியரில் மட்டும் கவனம் செலுத்தி வரும் பாவணிக்கு..
ஒரு கட்டத்தில் பிக்பாஸ் சீசன் 5 இல் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாவணி நீண்ட நாட்கள் பயணித்து பைனல்ஸ் வரை சென்றுள்ளார். மேலும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சக போட்டியாளர்களில் ஒருவரான அமீர் பாவணியிடம் காதலை கூறியிருந்தார்.
ஆனால் பாவணி அமீரின் காதலை மறுத்து விட்டு பிரெண்ட்ஷிப் ஆன ஒரு உறவு முறையையே மேற்கொண்டார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்த பாவணி இதுவரை எந்த படங்களிலும் கமிட் ஆகவில்லை என தெரியவருகிறது.
மேலும் சோஷியல் மீடியாவில் தொடர்ந்து மாடர்ன் புகைப்படங்களை வெளியிட்டு வரும் பாவணி தற்போது கருப்பு நிற உடை அணிந்து செம கிளாமரான லுக்கில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் தீயாய் பரவி வருகின்றன. இதோ அந்த அழகிய புகைப்படம் நீங்களே பாருங்கள்.

