மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நடிகை பாவனா..! அதுவும் யாருக்கு ஜோடியாக தெரியுமா..?

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை பாவனா இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் முதன்முதலாக இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.

இவ்வாறு தான் அறிமுகமான முதல் திரைப்படத்தின் மூலம் ஏகபோக வரவேற்பு பெற்ற நமது நடிகை அதன்பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகியாக மாறியது மட்டும் இல்லாமல் அதன் பிறகு வெயில் தீபாவளி ராமேஸ்வரம் பல்வேறு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுவிட்டார்.

ஆனால் இவர் தமிழ் சினிமாவில் நீடித்து நிற்கவில்லை அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த அசல் திரைப்படம் தல அஜித் உடன் இணைந்து நடித்த திரைப்படமாக அமைந்தது மேலும் அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் மலையாளத்தில் ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

மேலும் வெகுகாலமாக தமிழ் சினிமாவுக்கு பிரேக் கொடுத்த நடிகை பாவனா தற்பொழுது மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளாராம் அந்த வகையில் சமீபத்தில் நடிகை பாவனா புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க கம்மிட் ஆகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபல பிக் பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்ராமன் உடன் இணைந்து நடிக்க உள்ளாராம்.

bigboss
bigboss

எது எப்படியோ சுமார் 13 வருடங்களுக்கு பின்பாக நடிகை பாவனா தற்போது தமிழ் சினிமாவில் என்று கொடுப்பது ரசிகர்களை வியப்பில் அழ்த்தி உள்ளது.

Leave a Comment