விஷாலுக்கு ஜோடியாக நடித்த நடிகையின் மகள் தற்போது மலையாளத் திரைப்படத்தில்.! அம்மாவைத் தூக்கி சாப்பிடுவது போல..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஷால் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது விஷாலுடன் ஜோடி போட்டு நடித்த நடிகையின் மகள் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது அதோடு மட்டுமல்லாமல் அவர் மலையாளத் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் 2007ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் தாமிரபரணி இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து ஏராளமான திரைப்படங்கள் அதற்கான வாய்ப்பைப் பெற்றவர் நடிகை பானு.

இந்த திரைப்படத்தினை தொடர்ந்து பானு ரசிகர் மன்றம், அழகர்மலை, சட்டப்படி குற்றம், பொன்னர் சங்கர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இவர் இத்தனை திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் பெரிதாக இவர் கவர்ச்சியில் ஆர்வம் காட்டாத காரணத்தினால் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதன் காரணமாக கடந்த 2015ஆம் ஆண்டு ரிங்கு டாமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு 2016ஆம் ஆண்டு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இவ்வாறு ஆறு வயதாகும் அந்தப் பெண் குழந்தையின் புகைப்படத்தை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பானு வெளியிட்டு இருந்தார்.

bhanu
bhanu

இந்நிலையில் தற்போது பானு மற்றும் அவருடைய மகள் இருக்கும் ஏராளமான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி அந்த நிலையில் தற்போது அந்த ஆறு வயது குழந்தை மலையாளத்தில்  ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளாராம். எனவே ரசிகர்கள் அம்மாவைை தூக்கி சாப்பிட்டுவிடும் போல குழந்தை என்று கூறி வருகிறார்கள்

Leave a Comment