தாமிரபரணி பட நடிகை பானுவா இது.! குழந்தையுடன் இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

0

சினிமாவில் அறிமுகமாகி பல நடிகைகள் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்திருப்பார்கள். அப்படிப்பட்ட சிலர் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சினிமா பக்கம் தலை காட்டாமல் எனது சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் ஒருவர் தான் நடிகை பானு என்ற முக்தா. இவர் நடிகையாக மட்டுமல்லாமல் நடன இயக்குனராகவும், தொழில் முனைவோர்ரும் ஆவார். இவர் தமிழ்,தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட பிற மொழித் திரைப்படங்களிலும் நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார்.

இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த தாமிரபரணி  திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.இதனை தொடர்ந்து அழகர் மலை,  ரசிகர் மன்றம், சட்டப்படி குற்றம்,மூன்று பேர் மூன்று காதல், தேசிங்கு ராஜா உள்ளிட்ட இன்னும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் 2015ஆம் ஆண்டு ரிங்கு டோமி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார். இந்நிலையில் இவர்களுக்கு ஃகியாரா ரங்கு டோமி என்ற ஒரு மகளும் உள்ளார். அந்த வகையில் சமீபத்தில் தனது மகளுடன் இணைந்து போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த புகைப்படம்.