மணப்பெண் கோலத்தில் குக் வித் கோமாளி பவித்ரா.!! அதுவும் ஒரு ஆண் நபருடன்

0

பிரபல விஜய் டிவி பல நிகழ்ச்சிகளை ரசிகர்களை கவரும் வகையில் ஒளிபரப்பி வருகிறது. விஜய் டிவி பொதுவாக காமெடி என்ற ஒரு ஆயுதத்தை மையமாக வைத்து பல புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்து பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது உலகம் முழுவதும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்ததாக பிரபலமடைந்துள்ள நிகழ்ச்சி குக் வித் கோமாளி இந்நிகழ்ச்சி பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்துள்ளது. இந்நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகும் பலருக்கும் படவாய்ப்புகளும் கிடைத்து வருகிறது.

அந்த வகையில் இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் குடியேறியவர் நடிகை பவித்ரா. இவர் தற்பொழுது மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் எந்த படமும் சொல்லும் அளவிற்கு கை கொடுக்கவில்லை.அதன் பிறகுதான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று வருகிறார். இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த இவருக்கு தற்பொழுது இவருக்கென்ற தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் பவித்ரா திருமணக்கோலத்தில் தனது ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியானது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது என்று ஷாக்காகி பல கமெண்ட்டுகளை தெரிவித்து வந்தார்கள்.

ஆனால் இதனை அறிந்த பவித்ரா இது விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறி உள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

PAVITHRA 1
PAVITHRA 1