‘தாமிரபரணி’ பட நடிகை பானுவை ஞாபகம் இருக்கிறதா.! செம ஸ்டைலாக இருக்கும் புகைப்படம்..

Actress Banu: சினிமாவைப் பொறுத்தவரை நடிகர்களாக இருந்தாலும் நடிகைகளாக இருந்தாலும் தங்களது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வது மிகவும் கடினமான ஒன்று பல பிரபலங்கள் தங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல மவுசு இருந்தும் பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகியவர்கள் பலர் இருக்கின்றனர்.

அப்படி தனது சில திரைப்படங்களின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் நடிகை பானு. இவர் தமிழில் கடந்த 2007ஆம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான தாமிரபரணி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் விஷால், பிரபு, நதியா, நாசர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் விஷாலுக்கு ஜோடியாக பானு நடித்திருந்தார்.

கேரளாவை சேர்ந்த பானு மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் அப்படி முக்தா என்ற பெயரில் மலையாள படங்களில் நடித்து பிரபலமான இவர் தமிழில் பானு என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். மலையாளத்தை தொடர்ந்து தமிழில் தாமிரபரணி படத்தின் மூலம் பிரபலமான பானு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிப்பாரென எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை அந்த வகையில் கடைசியாக வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்ற படத்தில் நடித்திருந்தார். இவ்வாறு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகிய பானு தொழிலதிபர் ரிங்கு டோமி என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

தற்பொழுது இவருக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட அழகிய திரைப்படங்களை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். அப்படி பானு வெளியிட புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்பொழுது இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பானுவா? இது என்ன ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

BANU
BANU

Leave a Comment