ஆரம்பத்தில் திரை உலகில் குறும்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி அதன் பிறகு காதல் கண் கட்டுதே, ஏமாளி, நாடோடிகள் போன்ற படத்தில் நடித்ததன் மூலமாக ரசிகர்களால் பெருமளவு கவரப்பட்டார். நிலையில் தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
பிளவர் எண்ணித்துணிக மற்றும் முருங்கைகாய் சிப்ஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் இவ்வாறு இந்த திரைப்பட படபிடிப்புகள் மிக விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில் இத்திரைபடங்கள் திரையில் வெளி வருவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.
இது ஒரு பக்கமிருக்க சமீபத்தில் நமது நடிகைக்கு தெலுங்கில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது அந்த வகையில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி என்ற திரைப்படத்தை இயக்கிய சுரேந்தர் ரெட்டி அகிலனை நாயகனாக வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார் இத்திரைப் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க உள்ளார்கள்.
இதில் ஒரு கதாநாயகியாக நடிகை அதுல்யா ரவி தேர்வு செய்யப்பட்டுள்ளார் மேலும் இவ்வாறு உருவாகும் இத்திரைப்படத்திற்கு ஏஜென்ட் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது மட்டுமில்லாமல் இத்திரைப்படத்தில் நடிகர் மம்முட்டி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
தற்போது தமிழில் ஒரு சில நடிகைகளுக்கு சரியான பட வாய்ப்பு இல்லாததால் காரணமாக பலரும் தெலுங்கு சினிமாவை நோக்கி படையெடுத்து சென்று கொண்டிருக்கிறார்கள் அந்தவகையில் நந்திதா ஸ்வேதா நிவேதா பெத்துராஜ் போன்ற பல நடிகைகள் தெலுங்கு சினிமாவில் தற்போது கதாநாயகிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து தற்போது அதுல்யா ரவியும் தெலுங்கு பக்கம் திரைப் படத்தில் நடிப்பதன் காரணமாக ரசிகர்கள் பெரும் மன வருத்தத்தில் உள்ளார்கள்.