சினிமாவில் ஏராளமான நடிகைகள் அறிமுகமான காலகட்டத்தில் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பிற மொழி திரைப்படங்களிலும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தாலும் திருமணத்திற்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் அவர்களுக்கு நல்ல மார்க்கெட் இருந்தாலும் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வருபவர்கள் இருக்கிறார்கள் அப்படி ஒரு நடிகை தான் அசின்.
நடிகை அசின் தற்பொழுது திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் ரசிகர்கள் அசின் தனது கணவரை விவாகரத்து செய்து விட்டதாக கூறி தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது எனது இதனை பார்த்த அசின் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
2001ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான அசின் தமிழைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் சூர்யாவுடன் இவர் இணைந்து நடித்த ‘கஜினி’ திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றினை பெற்று தந்தது. இவ்வாறு இந்த படம் வெற்றி பெற்றதன் அடுத்து ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது அதிலும் அசின் ஹீரோயினாக நடித்து ஹிந்தி சினிமாவிற்கு அறிமுகமானார்.
இவ்வாறு சினிமாவில் மிகவும் பிசியாக இருந்து வந்த அசின் கடந்த 2016ஆம் ஆண்டு தொழிலதிபர் ராகுல் சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய இவருக்கு 2017ஆம் ஆண்டு பெண் குழந்தை ஒன்று பிறந்தது அதன் பிறகு குடும்பம் குழந்தை என பிசியாக இருந்து வருகிறார்.
திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தனது குழந்தை கணவருடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி தனது சோசியல் மீடியாவில் வெளியிட்ட மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் சமீபத்தில் அசினின் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்ததால் இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக தகவல் சோசியல் மீடியாவில் வைரலானது.

எனவே தற்பொழுது அசின் தனது விவாகாரத்திற்கு விளக்கம் அளித்துள்ளார். அதாவது, தற்பொழுது நாங்கள் கோடை விடுமுறையில் இருக்கிறோம் எதிர் எதிராக அமர்ந்து எங்கள் காலை உணவை அனுபவித்து மகிழ்ச்சியாக சாப்பிட்டோம். சில கற்பனையான மற்றும் ஆதாரமற்ற தகவல் பரவி வருவதை பார்த்தோம் நாங்கள் எங்கள் குடும்பத்தினர்களுடன் ஒன்றாக வீட்டில் அமர்ந்த நேரத்தில் நாங்கள் பிரிந்து விட்டோம் என்பது போன்ற ஆதாரமற்ற தகவல் பரவி வருகிறது இதனால் ஐந்து நிமிடம் எங்களது சந்தோஷத்தை இழந்து விட்டோம் என்று வருத்தத்துடன் இன்ஸ்டாகிராமில் நடிகை அசின் பதிவிட்டுள்ளார் இதனை அடுத்து நடிகை அசினின் விவாகரத்து தகவல் முற்றிலும் பொய்யானது என்பது தெரியவந்துள்ளது.


