நயன்தாராவை போல் ஆகணும் என ஆசைப்பட்டு களமிறங்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.! இது உங்களுக்கு செட்டாகுமா என கேள்வி எழுப்பும் ரசிகர்கள்

சோலோ ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்பொழுது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப் படங்களை தேர்ந்தெடுத்து வருகிறார்.  அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் கொஞ்சம் ஸ்பெஷல் என்றுதான் கூறவேண்டும்.

ஏனென்றால் தற்பொழுது வேணால் ஐஸ்வர்யா ராஜேஷ் அழகாக இருக்கலாம் ஆனால் இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் அழகாகவும் இருக்க மாட்டார். அதுவும் மிகவும் கருப்பு இப்படிப்பட்ட நிலையில் ஒரு நடிகை மிகவும் கலராக அழகாக இருந்தால் மட்டுமே அவரை நாம் முன்னணி நடிகையாக ஏற்றுக் கொள்வோம்.

ஆனால் திறமை இருந்தாலும் சினிமாவில் பிரபலம் அடைய முடியும் என்பதற்கு உதாரணமாக ஐஸ்வர்யா ராஜேஷ் திகழ்கிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த காக்கா முட்டை திரை படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இத்திரைப்படம் இவருக்கு சினிமாவில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து உள்ளார்.  அந்த வகையில் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் உள்ள மற்ற நடிகைகளை விடவும் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் மலையாளத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற தி கிரேட் இந்தியன் கிட்சென் தமிழிலும் ரீமேக் செய்து வருகிறது. இந்த திரைப்படம் சமையல் அறைக்குள் மாட்டிக் கொண்ட ஒரு பெண் அதிலிருந்து வெளியாகி மிகவும் சுதந்திரமாக எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பார் என்பதை மையமாக வைத்து திரைப்படம் உருவாக்க படுகிறது.

இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற ஐயப்பனும் குரோஷியும் இத்திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார் இத்திரைப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கவுள்ளார்.  அதன்பிறகு டிரைவர் ஜமுனா என்ற திரைப்படத்தில் கால் டாக்ஸி ஒருவராக நடிக்க உள்ளார்.

இத்திரைப்படம் ஒரு குடும்பத்தில் இருக்கும் பெண் தனது குடும்பத்தை எப்படி பார்த்துக் கொள்கிறார் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்பதை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் கிட்டத்தட்ட நான்கு திரைப் படங்களில் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment