நடிகர் அருண்பாண்டியனின் மகள் நடிகை கீர்த்தி பாண்டியன் கொரோனாவின் பொழுது, எப்படி விவசாயம் செய்கிறார் பாருங்கள்!

0

Actress Keerthi pandiyan farming video: நடிகரும் அரசியல்வாதியுமான அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். இவர் தற்போது தமிழ் திரையுலகில் தும்பா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி உள்ளார்.இப்படத்தின் இயக்குனர் ஹரிஷ் ராம் மற்றும் கணா புகழ் தர்ஷன்.இந்த படத்தில் விஜய் டிவி பிரபலமான தீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு அனிருத் மற்றும் மேர்வின் இசையமைத்துள்ளனர்.இப்படத்தின் மூலம் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இவருக்கென ஒரு ரசிகர் பட்டலத்தையே ஊருவாக்கிக்கொண்டார்.

keerthi 7
keerthi 7

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில். நடிகர் நடிகைகள் என அனைவரும் வீட்டில் இருந்தபடியே அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அனைவரும் நடனமாடுவது, சமைப்பது, படம் வரைவது, காபி போடுவது, கேக் செய்வது போன்ற வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் கீர்த்தி பாண்டியன் மட்டும் வித்தியாசமாக அவர்களது சொந்த நிலத்தில் விவசாயம் செய்வது போன்ற வீடியோவை பதிவிட்டுள்ளார். இதில் அவர் டிராக்டர் எவ்வளவு அழகாக ஓட்டி உள்ளார் என்பதை பாருங்கள். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோ.