ஒரு கைல தட்டையும் ஒரு கையில என்னையும் புடிச்சுகிட்டு பிச்சை எடுத்தார் விஜயகாந்த் சார்..

நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் அதேபோல் திரைப்படத்தை காட்டிலும் ரியல் லைப்பில் மிகவும் நல்லவர் பல சினிமா பிரபலங்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார்.

விஜயகாந்த் திரைப்படமான உழைத்து வாழ வேண்டும் என்ற திரைப்படத்தில் நான் நடித்தேன் அதுதான் என்னுடைய முதல் திரைப்படம் அந்த திரைப்படத்தில் விஜயகாந்த் சார் வரும்பொழுது நான் பிச்சை எடுக்கிற மாதிரி ஒரு சீன். அந்த சீனில் நான் பிச்சை எடுப்பதை பார்த்துவிட்டு குழந்தையை பிச்சை எடுக்க விடாதீங்க என சொன்னார்.

அது மட்டும் இல்லாமல் அப்பொழுது டைரக்டர் அதுதான் அவங்களுடைய சீன் என சொன்னார்கள் அதற்கு விஜயகாந்த் சார் குழந்தையை நான் கையில் பிடித்துக் கொள்கிறேன் தட்டை என் கையில் கொடுங்க என பிச்சை எடுக்கிற சீனில் விஜயகாந்த் சார் நடித்தார் அப்பொழுது எனக்கு விஜயகாந்த் சார் மிகப்பெரிய ஹீரோவாக தெரிந்தார் என நடிகை ஆர்த்தி கணேஷ் கூறியுள்ளார்.