காமெடி திரைப்படத்தில் நகைச்சுவை நடிகையாக அறிமுகமாகும் நடிகை அனுஷ்கா.! வெளிவந்த அதிர்ச்சி தகவல்..

0
ANUSHKA-SHETTY
ANUSHKA-SHETTY

பொதுவாக நடிகைகள் என்றால் குறிப்பிட்ட காலம் வரை மட்டும்தான் அவர்களால் தொடர்ந்து தங்களது மார்க்கெட்டை இழக்காமல் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் ஒரு சிறந்த நடிகையாக வலம் வர முடியும். மேலும் அந்த நடிகைகள் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டாலும் கூட அவர்களுக்கு பெரிதாக எடுப்பதற்கான வாய்ப்பை கிடைக்காது.

அந்த வகையில் ஒருவர் தான் நடிகை அனுஷ்கா. இவர் தமிழில் விஜய், சூர்யா, பிரபாஸ் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார் அதோடு தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் தங்கள் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களின் ஒருவராக மாறினார்.

இவர் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு சரியான பட வாய்ப்பு இல்லாததால் திரைப்படங்களில் பெரும்பாலும் நடிக்காமல் இருந்து வந்தார். மேலும் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்த நிலையில் விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடுவார் என்று செய்திகள் வெளியானது.

ஆனால் அனுஷ்கா தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை. ஆனால் இவர் நடிப்பில் உருவான சில திரைப்படங்கள் கிடப்பில் கிடந்தது. இந்த நிலையில் கடைசியாக அனுஷ்கா  நிசப்தம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது தெலுங்கு நடிகர் ஒருவரின் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஒரு காமெடி திரைப்படத்தில் அனுஷ்கா நடிக்க போவதாக டோலிவுட்டில் இருந்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  இதுவரையிலும் காமெடியில் கதாபாத்திரத்தில் நடிக்காத இவர் இந்த திரைப்படம் முழுவதும் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம் இதனைப் பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.