நடிகை அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் சூர்யா விக்ரம் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர்.
கடைசியாக அவர் நடித்த திரைப்படம் பாக்மதி, இவர் சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தில் நடித்து வந்தார். ஆனால் தற்போது இவருக்கு பட வாய்ப்பு சரியாக அமையாததால் பட வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு நிசப்தம் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது இந்த திரைப்படத்தில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே, ஹாலிவுட் நடிகர்கள் என பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் 4 இந்தியர்களுக்கும் அமெரிக்க போலீஸ் அதிகாரிகளுக்கும் இடையே நடக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் ஆகும்.
இந்த திரைப்படம் அமெரிக்காவில் படப்பிடிப்பு நடைபெற்றது அங்கு முடிவடைந்த நிலையில் தமிழ் ஆங்கிலம் இந்தி தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கின்றன இந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.
