இளம் வயது நடிகருடன் ஜோடி போடும் அனுஷ்கா.! இந்த முறை வேலைக்கு ஆகுமா எனக்கூறும் ரசிகர்கள்.!

0

பொதுவாக நடிகைகள் என்றால் குறிப்பிட்ட காலம் வரையிலும் மட்டும்தான் அவர்களால் தொடர்ந்து முன்னணி நடிகைகளாக நடிக்க முடியும் அப்படி ஹீரோயின்களாக நடித்து வந்தாலும் இவர்கள் இளம் வயதில் இருந்த மார்க்கெட் வயதான பிறகு பெரிதாக இருக்காது ரசிகர்களும் ஒரு முன்னணி நடிகை வயதானதிற்க்குப் பிறகு பெரிதாக விரும்பமாட்டார்கள்.

அந்த வகையில் ஒரு காலத்தில் எங்கு திரும்பி  பார்த்தாலும் அனுஷ்கா அனுஷ்கா என்றுதான் ரசிகர்கள் அனைவரும் கூறி வந்தார்கள்.  அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வந்தார் அனுஷ்கா. இவர் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் கவனம் செலுத்தி வந்தார்.

எனவே தனது சிறந்த நடிப்பினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். அதிலும் முக்கியமாக பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான பல முன்னணி நடிகர் நடிகைகள் இணைந்து பல கோடி பட்ஜெட்டில் உருவான திரைப்படம் பாகுபலி.இத்திரைப்படத்தில் அனுஷ்கா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

anushka shetty 1
anushka shetty 1

இத்திரைப்படத்திற்கு பிறகு தெலுங்கு சினிமாவிலும் பெரிதாக இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்து வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் சில இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சில திரைப்படங்களின் முழு கதையையும் கூறி உள்ளார்களாம்.

அந்தவகையில் தெலுங்கு இயக்குனர் ஒருவர் அனுஷ்காவின் கதாபாத்திரத்தை பற்றி சமீபத்தில் கூறி உள்ளார். யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கவுள்ள திரைப்படத்தில் நவின் பொலி செட்டி என்பவருக்கு மனைவியாக அனுஷ்கா நடிக்க உள்ளார்.