சினிமாவில் உள்ள பல நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் அங்கு தங்களது அழகு குறைந்து விடுமோ என்ற எண்ணத்தில் பலர் திருமணம் செய்து கொள்ளாமல் 40 வயதிற்கு மேலாகியும் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் ஒருவர்தான் நடிகை அனுஷ்கா.
இவர் திருமணம் குறித்து பல சர்ச்சைகள் இணையதளத்தில் வைரலாகி வருவது வழக்கமாக இருக்கிறது.இந்த நிலையில் இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபாஸை காதலித்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு என்ன காரணம் என்று தெரியவில்லை இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்பட்டு வந்தது.
இப்படிப்பட்ட நிலையில் மீண்டும் இவர் வெளிநாட்டு தொழில் அதிபரை திருமணம் செய்ய உள்ளதாகவும் அந்த தொழிலதிபருக்கு அனுஷ்காவை விட வயது கம்மி என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதனைப் பற்றி அனுஷ்கா தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளிவரவில்லை.
இந்நிலையில் தற்போது இவர் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ஆர்யா நடிப்பில் வெளிவந்த இஞ்சி இடுப்பழகி திரைப் படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை மிகவும் அதிகமாக ஏற்றியதால் அதன் பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு வர முடியாமல் குண்டாகவே இருந்து வந்தார்.
அதன் பிறகு சிறிது காலம் போகப்போக ஓரளவிற்கு தனது உடல் எடையை குறைத்து இருந்தார். இந்நிலையில் மீண்டும் இவர் குண்டாக மாறியுள்ளார் அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள். இதோ அந்த புகைப்படம்.