தென்னிந்திய சினிமா உலகில் தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து பெயரையும் புகழையும் சம்பாதித்தவர் நடிகை அனுஷ்கா. ஆரம்பத்தில் ஒன்னும் தெரியாத பிள்ளை போல் நடித்தாலும் போகப்போக டாப் நடிகர் படங்களில் நடிக்க ஆரம்பித்தால் கவர்ச்சியைக் காட்ட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.
வேறு வழியின்றி ஒரு சில காட்சிகளில் ஆடையின் அளவை குறைத்துக்கொண்டு நடித்து ரசிகர்களை கவர்ந்து இழுத்தார் இதனால் தொடர்ந்து சிறப்பாக ஓடினார் அனுஷ்கா. தொடர்ந்து டாப் நடிகர்கள் படங்களில் ஒரு பக்கம் நடிக்க மறுபக்கம் சோலோ படங்களிலும் நடித்து வெற்றி கண்டார்.
அப்படி இஞ்சி இடுபழகி திரைப்படத்திற்காக உடல் எடையை அதிகமாக ஏற்று நடித்தார் அதன்பின் சொல்லிக்கொள்ளும்படி உடல் எடையை குறைக்க முடியாமல் வேறு வழி இல்லாமல் ஜிம்மே கதி என கடந்தார் இருப்பினும் அவரது உடல் எடையில் மாற்றம் இல்லை.பாகுபலி போன்ற படங்களில் கமிட்டாகி இருந்தார்.
புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவரை ஒல்லியாக காட்டி எப்படியோ தனது காட்சிகளில் சிறப்பாக நடித்தார். பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் மீண்டும் பேசப்பட்டார் அதனை தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது.
கடைசியாக இவர் மாதவனுடன் கைகோர்த்து நிசப்தம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை அனுஷ்கா மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார் அந்த வகையில் நடிகர் நடிகர் பிரபாஸ் உடன் மீண்டும் இணைய உள்ளதால் ரசிகர்கள் சந்தோஷமாக உள்ளனர். ஏற்கனவே பிரபாஸுடன் இவர் பில்லா,மிர்ச்சி, பாகுபலி 1,2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்போ அவருடன் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.