சமந்தாவுக்கு வந்த வாய்ப்பை தட்டி பறித்த நடிகை அனுஷ்கா.. எந்தப் படம் தெரியுமா.?

நடிகை சமந்தா தமிழ் தெலுங்கு ஹிந்தி என தொடர்ந்து பல மொழிகளில் நடித்து வருவதால் இவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது சொல்லப்போனால் தென்னிந்திய சினிமா உலகில் நயன்தாராவுக்கு அடுத்தபடியாக சமந்தா தான் இருக்கிறார்.

அந்த அளவிற்கு படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதேசமயம் அந்த படங்கள் ஒவ்வொன்றும் அதிரிபுதிரி ஹிட் அடிக்கின்றன. சமீபத்தில்  கூட புஷ்பா திரைப்படத்தில் அமைந்துள்ள ஓ சொல்றியா மாமா பாடலுக்கு சும்மா அஞ்சு நிமிஷம் தான் வந்து போனார்.

அந்த பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது மேலும் அந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இந்த பாடல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து தமிழில் காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் அதனை தொடர்ந்து தெலுங்கில் சகுந்தலம், யசோதா ஆகிய படங்கள் அடுத்தடுத்து வருகின்ற..

நிலையில்  பிரபல கர்நாடக  பின்னணி பாடகி, பெங்களூரு நாகரத்தினம்மாவின் வாழ்க்கை வரலாறு படத்தின் மூலம் நடிகை அனுஷ்கா ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு முதன் முதலில் கமிட்டாகி குழுவை தேர்வு செய்தது என்னவோ சமந்தா தானாம்.

ஆனால் சமந்தாவுக்கு அடுத்தடுத்த படங்கள் இருப்பதால் கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டுள்ளது அந்த காரணத்தினால் அவர் இந்த படத்தை மிஸ் செய்யவே.. அவருக்கு பதில் நடிகை அனுஷ்கா ஷெட்டி நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகை அனுஷ்கா மீண்டும் விட்ட இடத்தை பிடிப்பார் என கூறப்படுகிறது.

Leave a Comment