நடிகை அனுஷ்கா தீபாவளியும் அதுவுமா ரசிகர்களுக்கு கொடுத்த ஷாக்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

0
anushka-shetty
anushka-shetty

நடிகை அனுஷ்கா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர், இவர் விஜய் சூர்யா ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார், அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக நடிகை அனுஷா கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

பாக்மதி திரைப்படத்தை தொடர்ந்து அனுஷ்கா லீட் ரோலில் நடிக்கிறார், இந்த திரைப்படத்திற்கு நிசப்தம் என டைட்டில் வைத்துள்ளார்கள், அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள நிசப்தம் திரைப்படத்தின் டீசர் வருகின்ற ஏழாம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்கள். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நிசப்தம் படத்தின் ப்ரீ டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்.

நிசப்தம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது, ஹேமந்த் குமார் இயக்கத்தில் உருவாகிவரும் நிசப்தம் திரைப் படம் ஆங்கிலத்தில் சைலன்ஸ் என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் மைக்கேல் மேடிசன் அஞ்சலி, அர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டியர்கள் நடித்துள்ளார்கள்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள நிசப்தம் திரைப்படத்தின் டீசருக்கு முந்தைய பிரீ டீசரை வெளியிட்டு உள்ளது. அந்த பிரீ டீஸரில் நவம்பர் ஏழாம் தேதி நிசப்தம் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என அறிவித்துள்ளார்கள். இந்த டீசர் ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் வருகின்ற ஏழாம் தேதி அனுஷ்காவின் தரிசனம் கிடைக்கப் போகிறது என ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.