இளம் நடிகரின் காதல் வலையில் சிக்கய நடிகை அனுஷ்கா..! இந்த வயசுல இதெல்லாம் தேவையா..?

0
anushka-1
anushka-1

தமிழ் சினிமாவில் இரண்டு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை அனுஷ்கா செட்டி. இவ்வாறு பிரபலமான நமது நடிகை இந்த திரைப்படத்தில் மாபெரும் வெற்றி கண்டதன் மூலமாக அடுத்தடுத்த பட வாய்ப்பு எளிதில் பெற ஆரம்பித்து விட்டார்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நமது நடிகை இஞ்சி இடுப்பழகி என்ற திரைப்படத்தில் நடித்த பொழுது உடல் எடை பருமன் கொஞ்சம் அதிகமாகிவிட்டது இதன் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகள் முற்றிலுமாக குறைந்து விட்டது என்றே சொல்லலாம்.

இதனை தொடர்ந்து தெலுங்கு திரைப்படம் பக்கம் சென்ற நமது நடிகை அங்கு நாகார்ஜுனா மகேஷ் பாபு போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் பல்வேறு ரசிகர்கள் பெருமக்களையும் கவர்ந்து விட்டார். என்னதான் இவர் மற்ற மொழிகளில் பல திரைப்படத்தில் நடித்திருந்தாலும் தமிழில் இவர் நடித்த சிங்கம் 1 சிங்கம் 2 சிங்கம் 3 ஆகிய திரைப்படங்கள்  ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டது.

இதனை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தில் கூட நமது நடிகை பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருப்பார் இவ்வாறு இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உடல் பருமன் அதிகமான அதன் காரணமாக வாய்ப்பின்றி தவித்து வந்தார்.

மேலும் நீண்ட நாட்களாக திரையுலகில் முகம் காட்டாமல் இருந்து வந்த நமது நடிகை மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார் அந்த வகையில் அனுஷ்கா செட்டி தன்னுடைய உடல் எடையை முற்றிலுமாக குறைத்தது மட்டுமில்லாமல் தற்பொழுது தெலுங்கு திரைப்படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளதாக தெரியவந்துள்ளது இதில் இப்போது இளம் நடிகர் கதாநாயகனாக நடிக்க உள்ளாராம்.

மேலும் இவர்களின்  கதைக்கு ஏற்ப இந்த திரைப்படத்தில் வயதுக்கு மூத்த பெண்ணை காதல் செய்யும் கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் அந்த கதாநாயகியாக நமது நடிகை அனுஷ்கா நடிக்க உள்ளார்.

anushka-1
anushka-1